வாழைச்சேனை நெனசல / அறிவகம்

நெனசல (அறிவகம்)  என்பது இலங்கையின் தகவல் மையமாகும். தகவல் மையம் என்பது “விக்கிபீடியா” தகவல் களஞ்சியத்தின் வரைவிலக்கணப்படி அதன் பொருள்விளக்கம் 2004 இல் பின்வருமாறு அறியப்பட்டது

“தகவல் மையம் எனப்படுவது கணனி இணையத்தளம் மற்றும் டிஜிடல் தொழில் திறமைகளை விருத்திசெய்வதற்குமான ஒரு பொது நிலையமாகும். அதே போல் ஒவ்வொரு தகவல் மையங்களும் வேறுபட்டவை. இத்தகவல் மையங்களின் பொதுவான நோக்கமானது சமூக பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி தனித்திருப்பதை குறைத்தல் ஆரோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் பொருளியல் சந்தர்ப்பங்களை ஏற்படத்துதல் போன்ற செயற்பாடுகளை இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லல் ஆகியவற்றை உதாரணங்களாக குறிப்பிடலாம்.”

மேலும் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் “மஹிந்த சிந்தனை” தேர்தல் அறிக்கையானது நெனசல மையங்களின் ஸ்தாபகம் இலங்கை கிராமங்களை அறிவு மற்றும் வாய்ப்புக்களைக் கொண்ட வெளி உலகோடு இணைக்கும் ஒன்றாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி நின்றது. 

எனவே தொழிநுட்பரீதியான கல்வியை வளர்த்துக் கொள்வதற்கு மிகவும் போட்டியான இக்காலப்பகுதியில் அதிகமான மக்களைக் கொண்ட  எமது கிராமத்திற்கு  கணனி மற்றும் தொடர்பாடல் தகவலுடன் கூடிய உலக அறிவினை வழங்குவதில் அல்லது பெறுவதில்  ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதில் முக்கியமான ஒரு பங்கினை வகிப்பதற்கு வாழைச்சேனை நெனசல பங்காற்றுகிறது. 
எமது கிரமாம் மீனவர்கள் விவசாயிகள் மாணவர்கள் தொழில் வியாபாரிகள் அரசாங்க தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள் மதரஸாக்கள் என பல்வேறுபட்ட குழுக்களைக் கொண்ட ஒரு முஸ்லிம் கிராமமாக திகழ்கின்றது. கணனிப் பாவணை அதிகரிப்பின் பின்னரும்  இக்கிராமத்தில் தொழில் வழிகாட்டலுக்கான கணனிக் கல்வியினை அதிக செலவின்றியும் சிரமமின்றியும் வழங்குவதுடன் தமது புதிய தொழில் முயற்சியாளரகளுக்கான போதிய தகவல்களை திரட்டுவதற்கும் வழிகாட்டுகிறது.

மேலும் தகவல் தொழில்நுட்ப அறிவின் வளரச்சிப்போக்கினை அதிகரிப்பதிலும் வாழைச்சேனை நெனசலயின் செயற்பாடு தொடர்ந்து கொண்டேயிருக்கும்

Click to our Profile